Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் சர்வதேச எயிட்ஸ் தின தேசிய நிகழ்வு

சர்வதேச எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு தேசிய நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
சுகாதார அமைச்சும் தேசிய பாலியல் மற்றும் எச்.ஐ.வி.,எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிலையமும் இணைந்து ஏற்பாடுசெய்த இந்த தேசிய நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை காந்தி பூங்கா அருகில் நடைபெற்றது.
தேசிய எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் காந்திப்பூங்கா அருகில் இன்று காலை ஆரம்பமானது.
கிழக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளர் கே.முருகானந்தன் தலைமையில் இந்த ஊர்வலம் காந்திபூங்காவில் ஆரம்பமாகி மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு சென்று அதன் ஊடாக வைத்தியசாலை வீதியூடாக மட்டக்களப்பு மாநகரசபை மண்டபம் வரையில் நடைபெற்றது.
இந்தஊர்வலத்தில்வைத்தியபணிப்பாளர்கள்,வைத்தியநிபுணர்கள்,மதத்தலைவர்கள்,மாணவர்கள்,வைத்தியசாலை ஊழியர்கள்,மாணவர்கள்,படையினர்,சிறைக்கைதிகள்,இளைஞர்கழக உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments