அரச சேவையாளர்களுக்கான 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து கொடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கலந்துரையாடல் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய இந்த அரச சேவையாளர்களின் வேதனத்தினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதமர் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு தெரிவித்துள்ளார்.


0 Comments