உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை மார்ச் மாதத்தில் நடத்த முடியாது எனவும் அந்த தேர்தல் மேலும் கால தாமதமாகலாம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயங்கள் இன்னும் பூர்த்தியாகவில்லையெனவும் இது பூர்த்தியடைய மேலும் சில மாதங்கள் தேவையெனவும் இதன்படி மார்ச் மாதத்தில் அந்த தேர்தல் நடக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


0 Comments