மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்ககோரி ஜனாதிபதிக்கு தபாலட்டை அனுப்பும் போராட்டத்தில் முஸ்லீம் பெண்களும் அதிகமாக ககலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மனிதனின் அடிப்படை உரிமை மீறலை ஏற்படுத்தும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க கோரி இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற போராட்டத்தில் முஸ்லீம் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டமை முஸ்லிம் பெண்களின் சமூக அக்கறையை எடுத்துக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில காலங்களாக முஸ்லீம் பெண்களின் சமூக விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகள் அதிகரித்து வருவதுடன் அவர்கள் தமிழ் மக்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்
குறிப்பாக சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாகவுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லீம் பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






0 Comments