பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணியை கொள்வனவு செய்வதற்காக விநியோகிக்கப்பட்டுள்ள வவுச்சரின் காலாவதியாகும் கால எல்லையை நீடிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே குறித்த வவுச்சரின் கால எல்லை இரண்டு மாதங்களாக வரையறுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் இதன்படி பெப்ரவரி கடைசி ரை அதனை பயன்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் புத்திக்க பத்திரன எம்.பியினால் சீருடை வவுச்சர் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.


0 Comments