Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நகர அபிவிருத்தி சம்பந்தமான முறைகேடுகள் பற்றி அறிக்கை

கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களான கு.ஏகாம்பரம், வி.கமலநாதன், அ.விஜயரெட்ணம், சி.ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
கல்முனை மாநகர சபையானது தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மூவின மக்களும் வாழ்கின்ற ஒரு பிரதேசமாகும் இங்குள்ள மாநகரசபையின் ஆட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆட்சியில் 15 உறுப்பினர்கள் முஸ்லிங்களாகவும் ஏனைய 4 உறுப்பினர்கள் தமிழர் பிரதிநிதிகளாகவும் மாநகர சபையில் உள்ளனர்.
கல்முனை மாநகரத்தின் நகர அபிவிருத்தித்திட்டம் வகுக்கப்பட்டு மேல்மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.
இது தொடர்பாக இங்கு வாழும் தமிழ் மக்களிடமே, தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடமே அபிவிருத்தி திட்டம் தொடர்பான எந்தவிதமான கருத்துக்களும் உள்வாங்கப்படவில்லை.
அத்துடன் கல்முனை மாநகரத்தின் முன்னால் முதல்வர் சிராஜ் மீராசாயு அவர்களின் காலத்தில் சபை அனுமதி பெற்றதாகக்கூறப்படுகின்றது அவ்வாரான எந்தவிதமான பதிவுகளும் எங்களது கூட்டறிக்கையில் இல்லை என்பதும் அவருடைய காலத்தில் புதிய நகர அபிவிருத்தி தொடர்பான எந்தவொரு தீர்மானமும் சபையில் கொண்டு வரப்படவும் இல்லை, நிறைவேற்றப்படவும் இல்லை என்பதோடு 7.11.2015 ஆம் திகதி நடைபெற்ற மாதாந்த கூட்ட அமர்வில் வதிவிட வளாகம் திருத்தம் என்ற தலைப்பில் முதல்வர் கௌரவ நிஸாம் காரியப்பர்அவர்களால் அறிவித்தல் ஒன்று அவசர அவசரமாக கூட்டத்தின் இறுதியில் வாசிக்கப்பட்டது.
இது தொடர்பாக நாங்கள் அனைவரும் அன்றைய தினமே எதிர்ப்பினை சுட்டிக்காட்டியிருந்தோம் அவ்வாறு எங்களால் எதிர்ப்புக்காட்டப்பட்ட விடயங்கள் கூட்டறிக்கையில் இல்லாமல் வேறு விதமாக அதாவது நகர அபிவிருத்தித்திட்டத்தின் முன் மொழிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் நகர அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக கடிதம் மூலம் நகர அபிவிருத்தி அமைச்சிக்கு சபை அங்கிகாரம் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகிறோம் அவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டது உண்மையானால் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செயல் என்பதுடன் இதனை கல்முனை வாழ் தமிழ் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளாகிய நாங்களும் வன்மையாக கண்டிப்பதுடன் இவற்றை எக்காரணம்
கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கின்றோம்.
எனவே கல்முனை நகர அபிவிருத்தியில் பல குழறுபடிகள் காணப்படுவதுடன் தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளுடன் சூழ்ச்சிகளும் இடம்பெறுவதாக எண்ணத்தோன்றுகின்றது இது தொடர்பான வெளிப்படைத்தன்மை மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுக்கும் கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கும் தெளிவாக தெரிவிக்கப்படாமையினால் நகர அபிவிருத்தியில் தயாரிக்கப்பட்ட விடயங்கள் அடங்கிய நகல் பிரதியினை வழங்கி வைக்குமாறு கேட்டுக்கொள்வதோடு எமது பிரதேச அங்கிகாரம் பெறப்படாத திட்டத்தி அமைச்சரவை அங்கிகாரத்திற்கான திட்ட முன்மொழிவாக செய்யக்கூடாது என்பதுடன் வர்த்தமானி அறிவித்தல் மூலமும் வெளியிடக்கூடாது என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதி திருகோணமலை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments