பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணிகளை கொள்வனவு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வவுச்சர் வழங்கும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதிபர்கள் ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தாம் வவுச்சர் வழங்கும் வேலைத் திட்டத்தில் 95 வீதம் வெற்றிக் கண்டுள்ளதாகவும் ஆனால் சில பாடசாலைகளில் அதிபர்கள் அவற்றை மாணவர்களுக்கு விநியோகிக்காது இருப்பதாகவும் எவ்வாறாயினும் அவர்கள் வேண்டுமென்றே அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.


0 Comments