அடுத்த வருடம் முதல் மாணவர்களுக்கு இலவச சீருடைக்கு பதிலாக வழங்கப்படும் வவுச்சரில் கையொப்பமிட மாட்டோம் என அதிபர் ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இன்று கொழும்பில் அந்த சங்கத்தினாரால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர்கள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.
கல்வி அமைச்சின் வவுச்சர் திட்டத்திற்கு நாம் முழு எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கின்றோம். அரசாங்கத்திற்காக 43 இலட்சம் மாணவர்களை பாதிப்புகளுக்கு இலக்காக்க முடியாது. இதன்படி அடுத்த வருடத்திலிருந்து நாம் அந்த வவுச்சர்களில் கையொப்பமிட மாட்டோம். என அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


0 Comments