முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் போது வகுப்பொன்றிற்கு 35 மாணவர்களே அனுமதிக்கப்பட வேண்டுமென்ற வரையரையை 2020ம் ஆண்டிலிருந்து செயற்படுத்தவே எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.
இதன்படி 2016ம் ஆண்டில் வகுப்பொன்றிற்கு 40 மாணவர்களை அனுமதிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் போது வகுப்பறையொன்றுக்கு 35 மாணவர்கள் உள்ளவாறு வகுப்புகள் பிரிக்கப்பட வேண்டுமென 2011ஆம் ஆண்டில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய அந்த திட்டத்தை 2016ம் ஆம் ஆண்டு முதல் செயற்படுத்த ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதனை செய்வதில் சில சிக்கல்கள் காணப்படுவதாகவும் இதனால் 2020இல் அதனை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திபிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


0 Comments