Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 20 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்: சுகாதார அமைச்சர்

எச்.ஐ.வி நோய் தொற்றுக்குள்ளான 20 மாணவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அந்த வகையில் நாட்டில் இதுவரை 2265 பேர் எச்.ஐ.வி நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கல்வித்துறையில் சுகாதார கல்வியை கட்டாயப் பாடமாக இணைத்து கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, உயர்தரத்தில் கல்வி கற்பதற்கு சுகாதார பாடத்தில் சித்தியடைவது கட்டாயமாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments