Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

141 வருடங்கள் பழமைவாய்ந்த நுவரெலியா கிரகரி குளத்தின் மதகை புதுப்பிக்கும் நடவடிக்கை

நுவரெலியா கிரகரி குளத்தின் மதகை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு மதகையின் ஊடாக நீர் வழிந்தோடும் பகுதியையும் புனரமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபையின் நகர பிதா மஹிந்த தொடம்பே கமகே தெரிவித்தார்.
தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் ஆகியோர் இணைந்து இந்த புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த செயற்திட்டத்திற்காக சுமார் 18 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கிரகரி குளத்தை அண்டிய வியாபாரிகள்இ சுற்றுலா அமைப்புகள்இ இராணுவம் மற்றும் கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் இந்த குளத்தின் நீர் தாவரங்களை அகற்ற நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக எடுக்கப்பட்டது.
1828ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ம் திகதி ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட நுவரெலியாவை அழகுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் இயற்கையை கவரும் வகையில் இந்த கிரகரி குளம் அமைக்கப்பட்டுள்ளது.
1874ம் ஆண்டு ஆளுநர் சேர் வில்லியம் ஹன்றி கிரகரி இந்த குளத்தை 1200 பவுன்கள் செலவில் அமைத்துள்ளார். ஆங்கிலேயர்களால் நாட்டில் அமைக்கப்பட்ட முதலாவது நீர்தேக்கமாகவும் இது கருதப்படுகிறது.
1970களிலிருந்து நுவரெலியாவை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாய நடவடிக்கைகள் காரணமாக இந்த குளத்தில் வண்டல் மண் தேங்கி காணப்பட்டதாக நகர பிதா மேலும் தெரிவித்தார்.
பல தடவைகள் இந்த வண்டல் மண் அகற்றப்பட்ட போதிலும் 141 வருடங்கள் பழமைவாய்ந்த இதன் அணைக்கட்டு புனரமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments