Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தன் உயிரை மாய்த்துக்கொண்ட இந்த வீரர்

பாடசாலை கொப்பியில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மரண சாசனம் எழுதிவிட்டு, புகைவண்டி முன் பாய்ந்து பாடசாலை மாணவன் ஒருவன் உயிரை மாய்த்துள்ளான்.
குறித்த சம்பவம் யாழ்.கோண்டாவில் புகைவண்டி தரிப்பிடத்திற்கு அருகில் இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி உயர்தர வகுப்பு மாணவனான இ.செந்தூரன் (வயது18) என்ற கோப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளான்.
குறித்த மாணவன் தனது பாடசாலை கொப்பியில் தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைகளில் வைத்திருப்பது தனக்கு மனவேதனையைக் கொடுப்பதாவும்,
அவர்களை உடனே விடுதலை செய்யுங்கள் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை கேட்டு கடிதம் எழுதிவைத்துள்ளதுடன், கடிதத்தில் கீழ் பகுதியில் தமிழீழம் என எழுதி கையொப்பமிட்டுள்ளதுடன், கீழே தனது சுய விபரங்களை எழுதி வைத்துள்ளான்.
இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments