Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்படாது: நிதி அமைச்சு

வற் வரி திருத்தத்தால் நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசிக் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது வரை 11 வீதம் எனும் தனி பெறுமானமாக அறவிடப்பட்ட வற் வரி வரவு செலவுத் திட்டத்தின் பின்னர், 0 வீதம், 8 வீதம், 12.5 வீதம் என மூன்று பிரிவுகளாக அறவிடப்படவுள்ளது.
அதற்கமை 11 வீதம் வற் வரியின் கீழ் இருந்த மொத்த மற்றும் சில்லறை வியாபாரம், வற் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதோடு, பொருட்களின் விலைகள் யாவும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கத்தின் தலையீட்டின் கீழ் இயங்கும் அத்தியவசிய சேவைகளான நீர் வழங்கல், மின்சாரம், தொலை தொடர்பு சேவைகளும் இவ்வாறு வற் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சேவை வழங்குதல் தொடர்பில், நுகர்வோர் மீது எவ்வித வற் வரியும் அறிவிடப்படமாட்டாது எனவும் இதனால் எவ்வித கட்டண அதிகரிப்பும் இடம்பெறாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் தேசிய உற்பத்திகள் தொடர்பில் இதுவரை அறவிடப்பட்டு வந்த 11வீத வற்வரி, 8 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதனால் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் எதிர்வரும் நாட்களில் குறைவடையும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments