சிரியாவில் ஆயுததாரிகளுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டுவரும் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
வடக்கு இராக்கில் உள்ள விமானநிலையங்கள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு வருகின்ற விமானங்களும் அங்கிருந்து புறப்படுகின்ற விமானங்களும் ‘விமான தவிர்ப்பு வலயம்’ ஒன்றை சுற்றி வேறு பாதையில் பயணிக்கின்றன.
தங்களின் நிலப்பரப்புக்கு மேலாக ரஷ்யாவின் ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு வடக்கு இராக்கில் உள்ள குர்து அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வடக்கு சிரியாவுக்குள் கிழக்கு-மேற்கு என்று இரண்டு திசைகளிலிருந்தும் ரஷ்யா போர்க் கப்பல்களிலிருந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திவருகின்றது.
0 Comments