Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளிக்கு எதிரான வான் தாக்குதல்கள் அதிகரிக்கப்படும்

மற்றும் ஈராக்கில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளிக்கு எதிரான வான் தாக்குதல்களை அதிகரிக்கப்போவதாக பிரான்ஸின் அதிபர் பிரான்ஸுவா ஒல்லாந்த் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரனுடன் பேச்சு நடத்தியபிறகு பேசிய ஒல்லாந்த், ஐஎஸ் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், பிரெஞ்ச் விமான தாங்கிக் கப்பலான ஷார்ல் த கோலும் கலந்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஐஎஸ் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஒல்லாந்த் எடுத்திருக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் கெமரன், பிரிட்டனும் அதேபோல தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறினார்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த தாம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறிய கெமரன், விமானப் போக்குவரத்து தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஒப்புகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
130 பேர் கொல்லப்பட்ட பாரிஸ் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அரசு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அமெரிக்க மற்றும் ரஷ்ய பிரதமர்களையும் ஹாலாந்து இந்த வாரத்தில் சந்திப்பார்.

Post a Comment

0 Comments