நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே புகை பரிசோதனைகளுக்காக 5000 ரூபாய் அறவிடப்படும் என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை சான்றிதழ் கட்டண உயர்வு தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதன் போது முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவற்றுக்கு கட்டனம் உயர்த்தப்படாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
புகைப் பரிசோதனை சான்றிதழ் கட்டணம் 5000 ரூபாவாக அண்மைய வரவு செலவுத்திட்டத்தில் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 Comments