Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வெல்லாவெளியில் காட்டுயானையின் தாக்குதல் அதிகரிப்பு: யானை தாக்கி ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை, தும்பாலை பகுதியில் இன்று காலை யானையின் தாக்குதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று காலை தும்பாலை காட்டுப்பகுதியில் விறகு வெட்டுவதற்காக சென்ற குறித்த பிரதேசத்தினை சேர்ந்த கே.ராஜ்குமார்(45வயது)என்பவரே படுகாயமடைந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மைக்காலமாக வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments