மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தேற்றாத்தீவு மகா வித்தியாலய வீதியில் உள்ள வீட்டின் முன்பாகவுள்ள மாமரத்திலேயே குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
பழுகாமத்தினை சேர்ந்த கே.குபேந்திரன்(36வயது) என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் இவர் தேற்றாத்தீவில் திருமணம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்தலத்துக்கு சென்றுள்ள களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments