Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

முதலமைச்சர் உரையை தடுத்த மஞ்சுள பெனாண்டோ: கிழக்கு மாகாணசபையில் அமளி துமளி

கிழக்கு மாகாணசபையின் 47வது அமர்வானது இன்று காலை 9.45 மணிக்கு சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார் தலமையில் ஆரம்பமானது.
அதன்போது ஆளும்தரப்பினர் 23 பேர் மற்றும் எதிர்த்தரப்பினர் 08 பேர் சமூகமளித்திருந்தனர்.
இன்று சபைக்கு புதிய உறுப்பிபனராக வருகை தந்த அப்துட் ரசாக் அவர்களை சபைத் தலைவர் வரவேற்றுக் கொண்டார்.
இன்றைய அமர்வின் அவசர பிரேரணையாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரிகளை எந்தவித அறிவித்தலும் இன்றி நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பாதுகாப்பு அதிகாரிகளை மீளப் பெற்றுத்தருமாறு கோரி அவசர பிரேரணையானது ஆளும் தரப்பு உருப்பினர் சிப்லி பாரிஸ் அவர்கலால் முன் வைக்கப்பட்டது.
குறித்த பிரேரணை தொடர்பில் உறுப்பினர் உதுமாலெப்பை கருத்து தெரிவிக்கையில், இன்று காலை சபைக்கு தாம் வருகைதரும்போது சபையின் நுழைவாயில் காவலாளிகளிடம் தனது அடையாள அட்டையினை காண்பித்த பின்னரே சபையினுள் பிரவேசிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் அவர்கள் கருத்து தெரிவிக்க முட்பட்ட வேளையில் எதிர்க்கட்சி உருப்பினர் மஞ்சுள பெனேண்டோ முதலமைச்சரை இறுதியில் உரை நிகழ்த்துமாறு  கோரியும் சக உருப்பினர்களுக்கும் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குமாறு கோரியும் கோரியதை அடுத்து சபையில் குழப்பநிலை நிலை நிலவியது.
அதனைத் தொடர்ந்து சபையின் எதிக்கட்சி உறுப்பினர்கள் சபைபையிலிருந்து வெளிநடப்பு செய்ததினை அடுத்து சபையானது ஒத்திவைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments