Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மியான்மார் சுரங்க நிலச்சரிவில் சிக்கி 70 பேர் பரிதாப பலி: பலரை காணவில்லை

மியான்மார் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று கூறப்படுகிறது.
வடக்கு மியான்மாரில் ‘ஜேட்’ சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 70 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில், சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அப்பகுதி கிராமவாசிகளே சிக்கி உள்ளனர் என்றும் தெரிய வந்துள்து.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ள மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஆபரணங்கள் தயாரிக்க பயன்படும் ‘ஜேட்’ கற்கள் உலகில் இப்பகுதியில் தான் அதிகமாக கிடைக்கிறது. இதனால் அதிக மதிப்பில் வருமானம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments