சூழலுக்கு ஏற்ற வகையிலான வாகனங்களை இலங்கைக்கு கொண்டு வருகின்றமை சற்று சிரமமானது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஹபீரிட் மற்றும் ஹிலியம் ஆகியவற்றினால் செயற்படுகின்ற வாகனங்களை செலுத்தக்கூடிய வகையிலான அடிப்படை வசதிகளை முதலில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என சங்கத்தின் தலைவர் சம்பத் மெரின்சிகே தெரிவி்த்துள்ளார்.
நாட்டில் சுத்தமான சூழலொன்றை உருவாக்குவதற்காக சூழலுக்கு ஏற்ற வகையிலான வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள், ஹபீரிட் மற்றும் ஹிலியம் ஆகியவற்றினால் செயற்படுகின்ற வாகனங்களுக்கான வரி 2.5 வீதத்தால் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
எனினும், சூழலுக்கு ஏற்றால் போலான வாகனங்களை இலங்கையில் பயன்படுத்த சிறு காலம் எடுக்கும் என சங்கத்தின் தலைவர் சம்பத் மெரின்சிகே தெரிவி்த்துள்ளார்.
ஹபீரி்ட் ஊடாக செயற்படுகின்ற வாகனங்கள் தொடர்ந்தும் பரிசோதனை மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


0 Comments