இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்ப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இந்தியாவின் த டெலிகிராப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு விசாரணைகள் எவையும், உண்மையில் சுயாதீனமான அமைந்ததில்லை என்பதை, கடந்த காலத்தில் அனுபவரீதியாக தாங்கள் உணர்ந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உள்நாட்டு விசாரணைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்காது.
இந்த விடயத்துக்கு சர்வதேச விசாரணையே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு தினங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா செல்கின்ற நிலையில், இரா.சம்பந்தனின் இந்த கருத்து வெளியாகி இருக்கிறது.
0 Comments