Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஈழத்துச்திருச்செந்தூர் முருகன் ஆலய தேரோட்டம் - ஆயிரக்கணக்கான அடியார்கள் பங்கேற்பு

ஈழத்து திருச்செந்தூர் என போற்றப்படும் மட்டக்களப்பு,திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கிலங்கையின் பெரும் பிரசித்திபெற்ற முருகன் ஆலயமாகவுள்ள இந்த ஆலயம் மகா துறவி ஓங்காரானந்தா சரஸ்வதி சுவாமிகளினால் ஸ்தாபிக்கப்பட்டதாகும்.

இந்தியாவின் புகழ்பூத்த முருகன் ஆலயமான திருச்செந்தூர் ஆலயத்தினை நோக்கியதாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.

கடந்த 03ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆலயத்தின் மகோற்சவம் சிறப்பாக ஆரம்பமானது.

பத்து தினங்கள் நடைபெற்ற ஆலயத்தின் உற்சவ தினத்தில் தினமும் சுவாமி உள்வீதி வெளிவீதியுலா என்பன நடைபெற்றது.

நேற்று பிற்பகல் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வந்து தேரில் அமர்ந்து அங்கு தேருக்கான கிரியைகள் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து ஆண்கள் ஒரு புறமாகவும் பெண்கள் ஒரு புறமாகவும் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த உற்சவத்தில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.













































Share on facebook
Share on twitterShare on emailShare on printMore Sharing Services

Post a Comment

0 Comments