மலையகத்தில் வாழும் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்டஇந்து இளைஞர் பேரவை ஊடாக லண்டன் உயர் வாசல் குன்று முருகன் ஆலயத்தின் நிதி உதவி மூலம் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கல்வி மேம்பாட்டினை உயர்த்தும் வகையில் நேரடியாக மலையகத்திற்கு சென்று கல்வி உபகரணங்களை வழங்கி வைத்தார்.
அந்த வகையில் பதுளை மாவட்டத்திலுள்ள ஹல்துமுல்லை விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம்,கொஸ்லாந்தை ஸ்ரீ கணோ தமிழ் மகா வித்தியாலயம், பூனாகலை இல.02 தமிழ் வித்தியாலயம், தொட்டுலாகலை தமிழ் மகா வித்தியாலயம், பிட்டரத்மலை தமிழ் வித்தியாலயம், தம்பேத்தன்ன இல.02 தமிழ் வித்தியாலயம் மற்றும் சில பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது மாணவர்களுக்கு நான்கு இலட்சத்து இருப்பதாராயிரம் ரூபாய் பெறுமதியான (2000 ஸ்டேலிங்பவுண்) பாடசாலை பாதணிகள், புத்தகப்பைகள், அப்பியாசக் கொப்பிகள், பென்,பென்சில், பயிற்சிப் புத்தகங்கள் உட்பட பல கல்வி உபகணரங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் உதவி வழங்கும் நிகழ்வின் போது ஹல்துமுல்லை விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தினரால் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரனின் சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னமும்,மேற்படி பாடசாலைகளில் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.
இவ் உதவியை வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைக்கும், லண்டன் உயர் வாசல் குன்று முருகன் ஆலயத்தினருக்கும் இப்பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.
0 Comments