Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

சென்னையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் ஜவஹர்லால்(வயது 45)- பீம்லால்(வயது 42) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர், இவர்களது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் போராப்பூர் ஆகும். 15 வருடங்களுக்கு முன்பே இங்கு குடும்பத்துடன் குடியேறி விட்டனர்.
பெயிண்டரான ஜவஹர்லால் கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வந்தார், இவரிடம் ராமபிரசாத் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் பீம்பாலுக்கும், ராமபிரசாத்துக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது, இந்த விவகாரம் ஜவஹர்லாலுக்கு தெரியவரவே மனைவியை கண்டித்துள்ளார்.11923244_952995138092684_2500951686436475831_n
கணவரின் பேச்சை கேட்காததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.எனவே கணவரை கொலை செய்ய பீம்பாலும், ராமபிரசாத்தும் திட்டம் தீட்டினர்.
இதன்படி நேற்றிரவு 10.30 மணியளவில் மகள்களும், மகனும் சாப்பிட்டு விட்டு அவர்களது அறைகளுக்கு தூங்குவதற்காக சென்று விட்டனர். பின்னர் ஜவஹர்லால் தனது அறைக்கு சென்று தூங்கினார்.
அப்போது பீம்லால், கள்ளக்காதலன் ராம பிரசாத்துக்கு போன் செய்து வரவழைத்தார். இருவரும் சேர்ந்து ஜவஹர்லாலின் தலையில் சிமெண்டு கல்லை தூக்கி போட்டனர்.
இதில் அவரது மண்டை உடைந்தது. ரத்த வெள்ளத்தில் படுக்கை யிலேயே ஜவஹர்லால் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் எதுவும் தெரியாதது போன்று படுத்துறங்கிய பீம்பால், காலையில் எழுந்தவுடன் தனது கணவனை யாரோ கொலை செய்து விட்டதாக கூச்சல் போட்டு கதறி அழுதுள்ளார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு உதவி கமிஷனர் ஜெய சுப்பிரமணியன், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் சுந்தர் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப் பட்ட ஜவகர்லாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஜவஹர்லால் கொலை செய்யப் பட்டு கிடந்த அறையில் சோதனை செய்து பார்த்ததில் சிமெண்டு கல்லின் உடைந்த பாகத்தை கண்டுபிடித்தனர்.
இதனைதொடர்ந்து பீம்பாலிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பீம்பாலை கைது செய்த பொலிசார், தப்பியோடிய ராமபிரசாத்தை தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments