Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மக்கா அனர்த்தம் - பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அச்சம்

சவுதி அரேபியாவின் புனித மக்கா பள்ளிவாசலில் பாரம் தூக்கும் பாரிய கருவி ஒன்று உடைந்து வீழ்ந்தத அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சவுதி அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் குறைந்த பட்சம் 107 பேர் பலியாகினர்.

மேலும் 230 பேர் காயமடைந்துள்ளனர்.

புனித மக்காவின் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த அதி உயரமான குறித்த பாரம் தூக்கும் கருதி, பள்ளிவாசலின் ஒரு பகுதியில் உடைந்து வீழ்ந்துள்ளது.

இதன் போது அதிக அளவான யாத்திரிகள் பள்ளிவாசலில் கூடி இருந்தனர்.

கடுமையான மழை மற்றும் காற்றே இந்த அனர்த்தத்துக்கு காரணம் என்று, சவுதியின் பொது பாதுகாப்பு துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மக்கா நகரில் புனிஜ ஹஜ்யாத்திரைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த முறையும் உலகளாவிய ரீதியாக லட்சக்கணக்கான ஹஜ் யாத்திரிகர்கள் புனித மக்கா நகருக்கு பயணிக்கவுள்ளனர்.

இந்த ஏற்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாரம் தூக்கும் கருவியே இந்த அனர்த்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சவுதி அரேபியாவின் புனித மக்கா பள்ளிவாசலில் பாரம் தூக்கும் பாரிய கருவி ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்த பட்சம் 107 பேர் பலியாகினர்.  மேலும் 230 பேர் காயமடைந்துள்ளனர். 

புனித மக்காவின் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த அதி உயரமான குறித்த பாரம் தூக்கும் கருவி, பள்ளிவாசலின் ஒரு பகுதியில் உடைந்து வீழ்ந்துள்ளது.

இதன் போது அதிக அளவான யாத்திரிகள் பள்ளிவாசலில் கூடி இருந்தனர்.

கடுமையான மழை மற்றும் காற்றே இந்த அனர்த்தத்துக்கு காரணம் என்று, சவுதியின் பொது பாதுகாப்பு துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மக்கா நகரில் புனிஜ ஹஜ்யாத்திரைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த முறையும் உலகளாவிய ரீதியாக லட்சக்கணக்கான ஹஜ் யாத்திரிகர்கள் புனித மக்கா நகருக்கு பயணிக்கவுள்ளனர்.
இந்த ஏற்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாரம் தூக்கும் கருவியே இந்த அனர்த்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

Post a Comment

0 Comments