Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம் அவர்களின் பூதவுடல் கல்முனை மாநகர சபைக்கு கொண்டு வரப்பட்டு- அங்கு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நேற்று சனிக்கிழமை காலம்சென்ற கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் எதிர்க் கட்சித் தலைவருமான ஏ.அமிர்தலிங்கம் அவர்களின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை மாநகர சபைக்கு கொண்டு வரப்பட்டு- அங்கு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
 கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவரது பணிப்பின் பேரில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.ஏ.மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.ராஜேஸ்வரன், ரீ.கலையரசன், டெலோ செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன், மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், எம்.ஜெயக்குமார், எஸ்.கமலதாசன், எம்.விஜயரட்ணம், எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, உட்பட மாநகர சபை அதிகாரிகளும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.
மாநகர சபையின் சபா மண்டபத்தில் பூதவுடல் வைக்கப்பட்டு, அமரர் அமிர்தலிங்கத்திற்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டதுடன் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோரினால் அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டன.  kal/ishunnamed (16) unnamed (23) unnamed (21) unnamed (17) unnamed (24) unnamed (22)

Post a Comment

0 Comments