மட்டக்களப்பு காத்தான்குடியில் ஆணின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கீச்சான்பள்ளம் கிராமத்தில் வெற்றுக் காணியொன்றுக்குள் கிடந்த ஆணின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கீச்சான் பள்ளம் எனும் இக்கிராமத்திலுள்ள வெற்றுக்காணியொன்றுக்குள் சடலமொன்று கிடப்பதாக காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு விரைந்த பொலிசார் அந்த சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சடலம் காங்கேயனோடையைச் சேர்ந்த எம்.நஜிமுதீன்(44) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.
மேற்படி நபர் நேற்றிரவு தனது வீட்டுக்கு செல்லாததால் இவரை அவரின் குடும்பத்தினர் தேடியதாகவும் இந் நிலையில் இவர் இன்று காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.


0 Comments