யாழ். புங்குடுதீவு மாணவி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்டதை கண்டித்து காத்தான்குடியில் இன்று வியாழக்கிழமை முஸ்லிம் பெண்கள் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் என்பவற்றில் ஈடுபட்டனர்.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா தலைமையில் அதன் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இதில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அங்கத்;தவர்கள் மற்றும் பெண்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது யாழ். புங்குடுதீவு மாணவி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்;.
ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
0 Comments