யாழ். புங்குடுதீவு மாணவி வித்யா பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டமும் கையெழுத்து போராட்டமும்
இடம்பெற்றது. மேலும் ஜனாதிபதி மைத்திரி சிறிசேனவிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்லாயிரம் பெண்கள் கையெழுத்திட்ட மகஜரும் அனுப்பி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பெண்கள் மாவட்ட பெண்கள் வலையமைப்பான சமாசம் எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
'சட்டமும் நீதியும் யாரை பாதுகாக்கும், சிறுவர் துஸ்பிரயோகத்தை உடன் நிறுத்துங்கள்' என வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 Comments