யாழ்.புங்குடுதீவில் பாடசாலை மாணவியான வித்தியா வயது 18. கடந்த 13.5.2015 அன்று காமுகர்களினால் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். பாடசாலை உயர்தரத்தில் கல்விகற்கும் இவர் பாடசாலை சென்று வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் அன்று மாலை வேளையில் ஊரகாவல் துறையில் முறைப்பாடு செய்த நிலையில் தேடும் பணியில் ஈடுபட்ட போது வீட்டிற்கும் பாடசாலைக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வைத்திய அறிக்கையில் இது ஒரு கூட்டு கற்பழிப்பு என்றும் அதன் பின்பே கொலைசெய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தனர். தற்போது சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. அதே நேரம் இது இராணுவம் நிறைய புழங்கும் இடம் என்பதால் மக்கள் பார்வை இராணுவத்தின் மீதும் உள்ளது. அத்துடன் 14.5.2015 சில ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இது முதல் தடவை அல்ல பல முறை இப்படியான அராஜகங்கள் ஈழத்தில் பல பாகங்களில் நடைபெற்ற நிலையில் தான் உள்ளது. கடந்த சில மாதங்கள் முன் யாழில் ஒரு மாணவி இப்படி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது குறிப்பிட்ட தக்கது .
0 Comments