மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள குகனேசபுரம் கிராம மக்கள் தினமும் யானைகளின் தொல்லையால் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குகனேசபுரம் கிராமத்திற்குள் இரவுவேளை புகுந்த யானைகள் அப்பகுதியில் உள்ள ஏழு வீட்டுத் தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளதுடன், ஒரு வீட்டின் முன்பகுதியையும் சேதப்படுத்தியுள்ளது.
வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் உறக்கத்தில் இருந்த போதும் அவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குகனேசபுரம் கிராமம் ஒரு மீள் குடியேற்ற கிராமமாகும். இக் கிராம மக்கள் இப்பகுதியில் மீள்குடியேற்றப்பட்டு ஒன்பது வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும் தங்களது குடியிருப்புக்களில் செய்கை பண்ணப்பட்ட நீண்டகாலப் பயிர் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் மூலம் நாங்கள் அறுவடை செய்வதற்கு முதல் யானைகள் வந்து அறுவடை செய்து விடுகின்றது.
இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், தங்கள் கிராமத்தினை யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாத்துத் தருமாரும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.








0 Comments