பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதியளவில் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மேலும் ஒரு வாரம் கழித்து 27 ஆம் திகதியளவில் கலைக்கப்படலாம் என்று அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்தல் முறை மாற்றம் தொடர்பான இறுதி வரைபு இதுவரை தயாராகாத நிலையிலேயே பாராளுமன்றம் கலைப்பு தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் 20 ஆம் திகதி அமைச்சரவை உப குழுவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதும் அது வர்த்தமானியில் அறிவித்து விட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அதன் பின்னர் பாராளுமன்றத்தில் இம்மாத இறுதியில் தேர்தல் முறை மாற்றம் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றிவிட்டு பாராளுமன்றத்தை அரசாங்கம் கலைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் இம்மாத இறுதியிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments