Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாணவி படுகொலை - யாழில் அனைத்து அமைப்புக்களும் போராட்டத்தில் குதிப்பு

புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் குடாநாட்டின் அனைத்து அமைப்புக்களும் இணைந்து கண்டன போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அரசே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடு, இல்லையேல் எம்மிடம் கொடு, பெண்ணே விழித்திரு உலகம் உன் கையில், திட்டமிட்டு செய்த செயலை சாராயத்தின் மீது சுமத்த பொலிஸாரே இடமளியாதே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கண்'டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக பெண்கள் அமைப்பு, இளைஞர் கழகம், குருக்கள், அருட்சகோதரிகள், பல்கலை மாணவர்கள், கியூடெக் நிறுவனம், மாதர் அபிவிருத்தி சங்கம் மற்றும் அனைத்து அமைப்புக்களும் அணி திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை தப்பிக்க வைக்கும் முயற்சி! - சகோதரன் நிஷாந்தன்
பரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் வழக்கில் நடப்பது என்ன? குற்றவாளிகளை தப்பிக்க செய்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா?
என்பன தொடர்பாகவும், லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தனது சகோதரியின் படுகொலை தொடர்பில் கைதானவர்களை தப்பிக்க வைக்க பொலிஸாரும் வழக்கறிஞர் ஒருவரும் முனைப்புடன் செயற்படுவதாக கூறி தனது  மனக் குமுறல்களையும் வெளியிட்டுள்ளார் வித்தியாவின் சகோதரன் நிஷாந்தன்.
வழக்கு தொடர்பில் என்ன செய்வதென்றே தெரியிவில்லை என்று தங்கள் குடும்ப நிலையினையும் லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு அவர் தெரிவித்திருக்கிறார்.

  • வித்தியாவின் வழக்கில் ஆஜராகிறார் மூத்த சட்டத்தரணி கே.வி தவராஜா
  • யாழில் தொடரும் பதற்றம்: விசேட அதிரடிப் படையினர் குவிப்பு
  • கைதானவர்கள் உறவினர்கள் அல்ல! தனிப்பட்ட பகையும் இல்லை: வித்தியாவின் குடும்பத்தினர்
  • வித்தியாவின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் போராட்டம்
     
  • மாணவியின் படுகொலையை கண்டித்து நாளை பாடசாலைகள் பகிஸ்கரிப்பு! சிறீதரன் பா.உ. ஆதரவு அறிக்கை 
  • வித்தியா படுகொலையில் பத்தாவது நபர் தப்பி ஓட்டம்: பிடித்து தரும்படி மக்கள் கொந்தளிப்பு! 
  • கசங்கிய முல்லையானாள் வித்தியா! 
  • வித்தியாவுக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம் 
  • வித்தியா படுகொலை : கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஒரு பகுதி 
  • புங்குடுதீவு மாணவி கொலை! மேலும் ஐவர் கைது? பொலிஸ் நிலையத்தை தாக்கிய மக்கள்!
  • 3 நாட்களுக்கு முன் வித்தியா! 3 மாதத்துக்கு முன் சரண்யா! வெளிச்சத்துக்கு வந்துள்ள திடுக். தகவல்!
  • புங்குடுதீவு மாணவி வழக்கில் கைதான சந்தேக நபர்களை வைத்தியசாலையில் தாக்கிய மக்கள்
  • புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் 9வது நபர் கைது
  • Post a Comment

    0 Comments