புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனைக் கண்டித்து மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பெண்கள் பாடசாலையான வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவிகளினால் வாயில் கறுப்புப்பட்டி அணிந்து போராட்டம் நடாத்தப்பட்டது.


தமது மாணவிக்கு நடைபெற்ற கொடுமைக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என இதன்போது மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
இன்று இந்த மாணவிக்கு நடைபெற்ற கொடுமைகள் நாளை நமக்கு நடைபெறலாம். இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
அத்துடன் இது தொடர்பில் குரல்கொடுக்காத கிழக்கு மாகாணத்தில் உள்ள மகளிர் அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பிலும் தமது அதிர்ப்தியை தெரிவித்துள்ளனர்.









புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டிக்கும் வகையிலும் அதற்கு நீதி கோரியும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக்கோரியும் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மகா வித்தியாலய மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் அதனைத் தொடர்ந்து அஞ்சலிக்கூட்டமும் நடைபெற்றது.





0 Comments