Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக ஈழத்தமிழர்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியும், பிரபல வர்த்தகருமான சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற பின் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக திஸர சமரசிங்க அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக செயற்பட்டார். கடற்படைத்தளபதியாக இருந்த அட்மிரல் திஸர சமரசிங்கவை உயர்ஸ்தானிகராக முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நியமித்த போது மனித உரிமை அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எனினும் திஸர சமரசிங்க அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வந்தார்.
இந்நிலையில் சோமசுந்தரம் ஸ்கந்தகுமாரை அப்பதவிக்கு நியமிக்க பாராளுமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் பதவியேற்கும் முன்னர் அவுஸ்திரேலியாவும் இந்த நியமனத்தை ஏற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments