Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை நியமனம்?

அரசியல் சாசன அமைப்பு சபைக்ககான உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் அமைப்பு சபையின் உறுப்பினர்களாக பத்து பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த சபையில் பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அங்கம் வகிக்க உள்ளனர்.
இவர்களுக்கு மேலதிகமாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, ஜோன் செனவிரட்ன, இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இவர்களுக்கு மேலதிகமாக ஜனாதிபதி ஒருவரை பெயரிட உள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் இணக்கப்பாட்டுடன் மற்றும் மூன்று உறுப்பினர்கள் பெயரிடப்பட உள்ளனர்.
பெரும்பாலும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உறுப்பினர்கள் பெயரிடப்பட உள்ளதாக அராசங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவ முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments