Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 27ல் நடைபெறும்?

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 27ம் நாள் நடைபெறலாம் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் தேர்தலை நடத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 27ம் நாள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன, அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
20வது திருத்தச்சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சபை தொடர்பான இணக்கப்பாடுகள் காணப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும், புதிய நாடாளுமன்றம் செப்டெம்பரில் உருவாக்கப்படும் என்றும் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments