முன்னாள் அமைச்சர்கள் எட்டு பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட உள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த இவர்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளனர்.
எட்டு பேரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இவ்வாறு கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதற்கு மாகாணசபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கடந்த இருபது ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் இருக்கையில், வெளியில் இருந்து வருபவர்களுக்கு வேட்பு மனு வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என தெரிவித்துள்ளனர்.
கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு உரிய சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரப்பட உள்ளதாக மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments