Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கோத்தபாய ராஜபக்சவின் மனுவை விசாரிக்கும் நீதிபதி ஒருவர் விலகல்

கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் குழுவில் இருந்து ஒருவர் விலகியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
கோத்தபாயவின் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விசாரணைக் குழுவின் நீதிபதி புவனெகா அலுவிகாரே விசாரணைகளில் இருந்து தனிப்பட்ட காராணங்களுக்காக விலகிச் சென்றதாக கொழும்புத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஏனைய இரண்டு நீதியரசர்களான ஈவா வனசுந்தர,சிசிர டி ஆப்ரா ஆகியோர் முன் இவ்வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி பிரிவின் செயற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தியும் தன்னை கைது செய்யும் திட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரியும் கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments