ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய அரசாங்கம் 100 நாட்களுக்கு மாத்திரம் தான் மக்கள் ஆதரவு பெற்றுக்கொண்டது என அவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்படி என்றால் தற்போதைய அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க புண்ணியத்திற்காக பிரதமராகியுள்ளார் எனவும் அவர் அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என தெரிவித்து உறுப்பினர்கள் சிலர் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து நீடிப்பது சட்ட விரோதமான செயல் என மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஆயத்தமாவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


0 Comments