வாழைச்சேனை மிறாவோடை தமிழ்க் கிராம காணிகளில் முஸ்லீம்களின் அத்துமீறிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை வாழைச்சேனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இன்று காலை 8.30 மணியில் இருந்து வாழைச்சேனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் பிரதேச செயலகத்திற்குள் உத்தியோகத்தர்களை செல்லவிடாது தடுத்துள்ளதுடன் தங்களுக்கான காணிப்பிரச்சினைக்கு உடனடியான தீர்வினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மாவட்ட அரசாங்க அதிபர் வரும்வரை போராட்டம் தொடருமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த மேலதிக தகவல்களை பெற எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.






0 Comments