Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எமது சமூகத்தை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்ல பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்

அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். அந்த வகையில் இப்பிரதேசத்துக்குட்பட்ட பெண்களில் பலர் சிறு சிறு, கைத்தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும் பல பெண்கள் வீடுகளிலே எதுவித சுயதொழில்களையும் முன்னெடுக்காமல் முடங்கிக் கிடக்கின்றார்கள். இந்த நிலைமை எதிர்காலத்தில், மாற்றமடைய வேண்டும்.  சுயதொழில்களை ஊக்கப்படுத்துவதற்காகவே நாம் சமூர்த்தி வாழ்வின் எழுச்சி வங்கிகளினூடாக கடன்களை வழங்கி வருகின்றோம். இக்கடன்களைப்பெற்று இப்பிரதேசத்திலுள்ள மக்கள் சுய தொழில்களை மேற்கொண்டு முன்னேற்றமடைய வேண்டும் என்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள சமூர்த்தி சமாஜத்தின் புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் திங்கட்கிழமை (27) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இப்பிரதேசத்தில் மாங்காடு, எருவில், கல்லாறு, ஆகிய இடங்களில் சமூர்த்தி வாழ்வின் எழுச்சி வங்கிகளும் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக வாளாகத்தினுள் சமூர்த்தி வாழ்வின் எழுச்சி மகா சங்கமும் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் 173 சங்கங்களும் 1,929 குழுக்களும் சமூர்த்தி வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு சிறந்த முறையில் இயங்கி வருகின்றன. 

சமூர்த்தி வாழ்வின் எழுச்சியில் இப்பிரதேசத்தில் அதிகளவு பெண்கள்தான் அங்கத்துவம் வகிக்கின்றனர், எனவே பெண்கள்தான் குடும்பங்களிலும் கிராம மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் அபிவிருத்திக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும். சேமிப்புப்பழக்கத்தை தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்க வேண்டும். சேமிப்புக்கள், எதிர்காலத்தில், குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கும்  பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும் உந்து சக்தியளிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments