Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கை உயர்த்து முன் சிந்திக்கவும்!- முரத்தட்டுவே ஆனந்த தேரர் -

19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதவாக கை உயர்த்துவதற்கு முன்னர் சிந்தித்து பார்க்க வேண்டுமென தேசிய பிக்குகள் சம்மேளனத்தின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தை நினைத்தவாறு நிறைவேற்றிக்கொள்ள இடமளித்தால் அது பாரிய தவறாகும்.
நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை ஏற்படக்கூடிய அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு இணங்கினாலும், மக்களிடம் மூடி மறைத்து அவசரமாக 19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான ஓர் திருத்தச் சட்டத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது.
நாட்டுக்கு பொருத்தமான ஓர் அரசியல் அமைப்பினையே முன்வைக்க வேண்டுமென ஜனாதிபதியிடம் கோருகின்றோம்.
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்படவுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை.
மஹாநாயக்கத் தேரர்கள் கூறுவதனைப் போன்று நாட்டுக்கு ஒரு தலைவரே அவசியமாகின்றார். நாட்டில் பல தலைவர்கள் இருந்தால் அது சிக்கலை ஏற்படுத்தும்.
19ம் திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தெளிவில்லை. இவ்வாறான பின்னணியில் மக்களுக்கு எவ்வாறு தெளிவு ஏற்படும் என முரத்தட்டுவே ஆனந்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாரஹென்பிட்டி அபாயராம விஹாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments