Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நான் கல்வியமைச்சர் என்பதற்காக ஒரு ஆசியருக்கு இடமாற்றக்கடிதத்தினை வழங்க முடியாது.

கல்வியில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது சுதந்திரமான கல்வி நிர்வாகம் நடைபெற வேண்டும் என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற் (21.3.2015) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு சண்சைன் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
களனிப்பல்கலைக்கழக பட்டதாரிகளின் கிழக்கு மாகாண நண்பர்கள் வட்டத்தினால் நடாத்தப்பட்டத்தப்பட்ட இந்த வரவேற்பு வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர்  கல்வியில் அரசியல் தலையீடுகள் இருக்க கூடாது. அரசியல் தலையீடுகள் பல் வேறு பிரதேசங்களில் இருந்தும் அரசியல் வாதிககளில் இருந்தும் கோரிக்கைகள் வரும் போது கல்வி நிர்வாகத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.
சுதந்திரமான கல்வி நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன். அதற்காக என்னால் முடிந்த வரை நான் படுபடுவேன். கடந்த காலங்களில் நான் கல்வி நிர்வாக கட்டமைப்பில் வகித்த பதவிகளின் அடிப்படையில் இந்த கல்வியமைச்சுக்கு வந்த அரசியல் தலையீடுகள் பற்றி நான் நன்கு அறிவேன்.
இந்த மாகாண சபைக்கு முந்திய  மாகாண சபையில் எனக்கு ஏற்பட்ட பெரிய அரசியல் அழுத்தங்கள் ஆசிரியர் அதிபர் இடமாற்றங்கள் தொடர்பில் மிகப் பெரிய அரசியல் இடங்களில் இருந்து வந்த கட்டளைகளை நான் நிறைவேற்ற வில்லை. நீதியற்ற முறையற்ற இடமாற்றங்களை செய்யாததன் காரணமாக என் மீது அழுத்தங்கள் வந்தது.
அரசியல் ரீதியான அழுத்தங்களை எவ்வளவு தூரம் நாங்கள் சமாளிக்கின்றமோ அந்தளவு தூரம் எமது மாகாணத்தில் முறையான கல்வி நிருவாகத்திற்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
அரசியல் தலையீடுகள் மாகாண கல்வி நிருவாகத்திலிருந்து அகற்றப்படல் வேண்டும். நீதிமுறையற்ற நேர்மையற்ற தனிப்பட்ட முறையில் பாதிக்க கூடிய விடயங்கள் கல்வி நிர்வாகத்தில் நடைபெறுமாக இருந்தால் அது தொடர்பான சில முறைப்பாடுகள் வரும்போது அதனை நீதியாக விசாரித்து செய்வதற்கு தலையிடலாமே தவிர அரசியல் வாதிகள் தங்களுக்கு விருப்பமான படி கல்வி நிருவாகத்தினை மாற்றுவதற்கு விரும்பும் போது கல்வி நிர்வாகத்தின் ஒழுங்கான செயற்பாடுகளை பாதிக்கும்.
கிழக்கு மாகாணத்திலேயே ஆகக் கூடுதலான ஆளணியினரைக் கொண்ட அமைச்சு எங்களுடைய கல்வியமைச்சாகும் இதில்  ஆசியரியர்கள், அதிபர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் 24000 க்கு மேற்பட்டோர் கடமையாற்றுகின்றனர். அதே போன்று கிழக்கு மாகாணத்தில் அதிக செலவீனங்களைக் கொண்ட அமைச்சும் எமது கல்வியமைச்சாகும்.
ஆசியர்கள் அதிபர்கள், பாடசாலையின் பெற்றோர்கள் அவர்களின் பிரச்சினைகளை கல்வியமைச்சுக்கு வந்து கூறுகின்றனர். பெற்றார்கள் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் பற்றி நேரடியாக அமைச்சுக்கு வந்து கூறுகின்றனர். இவ்வாறு மக்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ள ஒரு அமைச்சுத்தான் கல்வியமைச்சாகும்.
கல்வியமைச்சர் என்பவர் ஒரு நேரடியான கல்வி நிருவாகியல்ல நான் கல்வியமைச்சர் என்பதற்காக ஒரு ஆசியருக்கு இடமாற்றக்கடிதத்தினை வழங்க முடியாது.
நான் ஒரு அதிபருக்கு நியமனக்கடிதத்தை வழங்க முடியாது. அதே போன்று ஒரு சிற்றூழியருக்கேனும் ஒரு பதவியுயர்வுக ;கடிதத்தை வழங்க முடியாது.
இதை வழங்க கூடிய நிர்வாக கட்டமைப்பான மாகாண கல்விப்பணிப்பாளர் வலயக் கல்விப்பணிப்பாளர், கல்விச் செயலாளர் என்பவர்களினூடாகத்தான் மேற் கொள்ள முடியும்.
கல்வியமைச்சர் என்பவர் ஒரு மேற்பார்வை, வழிப்படுத்தல், ஆலோசனை வழங்குதல், பாரபட்ச மற்ற செயல்கள் இடம் பெற்றால் அதை தடுப்பது போன்ற விடயங்களை செய்யலாம்.
கல்வி ஆளணியை வளப்படுத்துகின்ற பொறுப்பை என்னால் முடிந்த வரையில் நான் செய்வேன் என மேலும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணிகத்தின் தலைவர் பொன் செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி க.தங்கேஸ்வரி உட்பட கிழக்கு மாகாணத்தில் உள்ள களனிப் பல்கலைக் கழக பட்டதாரி நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணிக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களையும் வழங்கினர்.

Post a Comment

0 Comments