Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி தேர்தலின் போது தென்னந்தோப்பில் பதுங்கியிருந்த மைத்திரிபால

டந்த ஜனாதிபதி தேர்தலில் தமது வாக்கை செலுத்திய பின்னர் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, இரகசியமாக இரவோடிரவாக குருநாகலில் உள்ள தென்னம் தோட்டம் ஒன்றுக்கு சென்று மறைந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருடைய நெருங்கிய நண்பரின் தென்னந்தோட்டத்திலேயே அப்போதைய பொதுவேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன குடும்பத்தினருடன் தங்கியிருந்ததாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே தாம் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் தமது குடும்பமே அழிக்கப்பட்டிருக்கும் என்று மைத்திரிபால பிபிசிக்கு செவ்வி ஒன்றை அளித்திருந்தார்.
இதன் பின்னணி செய்தியையே இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, குருநாகல் நகரில் இருந்து தூரத்தேயுள்ள தொடங்கஸ்லந்த என்ற தென்னந்தோட்டத்துக்கு மைத்திரிபால குடும்பத்தினர் இரவோடிரவாக சென்றனர்.
இதன்பின்னர் தேர்தல் முடிவு வெளியானதன் பின்னரே மைத்திரிபால சிறிசேன கொழும்புக்கு திரும்பியதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments