தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எவ்வித விளக்கமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
வானொலி நிகழ்வொன்றில் நேற்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடுவதனால் தமிழ் மக்களுக்கு தேசிய கீதம் தொடர்பான உணர்வு இல்லாமல் போய்விடும். இதனால் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடினால் நாடு குறித்தும் தமிழ் மக்களுக்கு ஒரு உணர்வு ஏற்படுமென தெரிவிக்கிறார்கள். அது உண்மையா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்தவர், தமிழ் மக்களுக்கு நாடு, தேசிய கீதம் தொடர்பாக உணர்வு வர வேண்டுமென்றால் அவர்கள் தேசிய கீதத்தின் அர்த்தங்களை புரிந்துக்கொள்ள வேண்டும். சிங்கள மொழியில் பல முக்கியமான வார்த்தைகள் கொண்டு தேசிய கீதம் எழுதப்பட்டுள்ளது. எனவே அதனை வேறு மொழியில் மொழிபெயர்ப்பு செய்வது தவறாகும்.
தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதிக்க முடியாதென முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹதுன்நெத்தி, அவரின் பெயரை நாங்கள் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தால் சென்ட்ல் வுட் (Sandle wood) நெட்டி என எழுத முடியாது.
அதேபோல் தான் “ஸ்ரீலங்கா மாத்தா” என்பதை ஸ்ரீலங்கா தாயே என்று எப்படி கூற முடியும். ஸ்ரீலங்கா மாத்தா என்று தான் தமிழிலும் பாட வேண்டும். தேசிய கீதத்தை தமிழில் எமுதினாலும் அதன் உச்சரிப்பு சிங்கள மொழியில் தான் இருக்க வேண்டும். எனவே தேசிய கீதம் சிங்களத்தில் தான் பாட வேண்டும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


0 Comments