ஆட்சி மாறியபோதும் தமிழ்மக்களுக்கான கெடுபிடிகள் கைதுகள் அச்சுறுத்தல்கள் இன்னும் குறையவில்லை இதைசர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட
தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றஉறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். புதிய ஐனாதிபதிமைத்திரிபாலசிறிசேனா பதவியேற்றபின்வடகிழக்குதமிழ்மக்களுக்கு நிம்மதி ஏற்படும் என எதிர்பார்த்த போதும் அது எமக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.குறிப்பாக வெளிநாடுகளில் வேலைவாய்புக்காகவும் புலம்பெயர்ந்து வாழ்பவர்களும்சுதந்திரமாககட்டுனாயக்கா விமானநிலையம் ஊடாக பயணிக்கமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது மத்திய நாடுகளில்வேலைவாய்புக்காக சென்றவர்களும் ஐரோப்பியநாடுகளில் புலம்பெயர்ந்துவாழ்பவர்களும் கடந்ந மகிந்த அரசுபோல் மைத்திரி அரசிலும் கைதுசெய்யம்பட்டுகுற்றப்புலனாய்வாளர்களால்விசாரணை செய்யப்பட்டு 4ம் மாடியிலும்ஏனய சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் மத்தியநாட்டில் வேலை வாய்ப்பு
க்காக சென்று விடுமுறையில் நாடுதிரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும் யாழ்மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுமாக ஏறக்குறைய (9)ஒன்பது இளைஞர்கள் கட்டுனாயக்கா
விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.அண்மையில் பிறான்ஷில் இருந்து இலங்கைக்கு வருகைதந்து தமதுஉறவினர்களை கிளிநொச்சியில் பார்வையிட்டு செல்லும்போது 41வயதானமுருகேசு பகிரதி எனும் தாயும் அவரின் 8 வயதுடைய சிறுமியும் கட்டுனாயக்கா
விமானநிலையத்தில் மீண்டும் பிறான்ஷ்செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள் இதற்கு இலங்கை அரசுகூறும்காரணம் அந்த தாயார் ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கடல்படையில் இருந்த்தாகவும் அதற்காக விசாரிப்பதற்காகவும் கைது செய்ததாக கூறுகின்றனர்,
உண்மையிலேயே ஆட்சிமாற்றம் ஏற்பட்டபின் தமக்கு ஏதும் நடக்காது என்ற நம்பிக்கையில் இவ்வாறு வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்களை திட்டமிட்டு அவசரகாலசட்டத்தை வைத்
துக்கொண்டு கைதுசெய்வதானது கண்டிக்கதக்க விடயமாகும்.தொடர்ந்தும்
அவசரகாலச்சட்டத்தை வைத்துக்கொண்டு நல்லாட்சியைப்பற்றியும்,இணக்காஆட்சியைப்பற்றியும்,தேசிய
ஆட்சியைப்பற்றியும்,கூட்டாச்சியைப்பற்றியும்,பேசுவதும் முழுஉலகத்தையே ஏமாற்றும் செயலாகும்.
இதைவிட வவுனியாவில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் இப்படியான சம்பவங்களை பார்க்கும்போது தொடர்ந்தும் அவசரகாலசட்டத்தை வைத்துக்கொள்ளவதற்காக இவ்வாறான சம்பவங்கள் சர்வதேசத்துக்கு காட்டப்ப டுகின்றதா என்ற சந்தேகம் எமக்குஎழுகி ன்றது.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அல் ஹுசெய்ன் அவர்கள் கடந்த 28வது அமர்வில் உரையாற்
றும்போது இலங்கை அரசு கடந்தகாலங் ளில்விட்டதவறைமீண்டும்செய்யவேண்டாம் என எச்சரித்துள்ளார்.ஆனால்இலங்கை அரசு அரசுத்தலைவர் மாறினாலும் தமிழ்மக்கள்மீதான அடக்குமுறைகள் மாறவில்லை என்பதை இந்தசம்பவங்கள்கோடிட்டுக்காட்டியுள்ளன.
எனவே புலம்பெயர் எமது சமூகம் எப்படிஇலங்கைக்கு வருகைதந்து முதலீடுகள்
செய்யமுடியும்.இவ்வாறுதான் தற்போதய அரசின் நிலைமை தொடர்கிறது இதை சர்வதேச நாட்
டின் தலைவர்களும் இராயதந்திரிகளும் புரிந்துகொண்டு இலங்கை அரசுக்கு இவ்வாறான நிலைமைகள் தமிழர்களுக்கு ஏற்படாவண்ணம் அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பி
னர் பாக்கியசெல்வம் அஅரியநேத்திரன்
0 Comments