மகிந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி அலுவலகத்தில் கடமையாற்றிய ஊழியர்கள் சிலரின் தகவல்கள் அடங்கிய கோப்புகள் தயாரிக்கப்படாமையினால் இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் அவர்களது சம்பளம் இழக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்தியோகஸ்தர்கள் மற்றும் அலுவலகங்கள் பணி உதவியாளர்கள் 75 பேர் இவ்வாறான சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதோடு அவர்கள் தினமும் கோப்புகளை சரி செய்வதற்காக பொது நிர்வாக அமைச்சிற்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழியர்களை 2005 ஆம் ஆண்டு மாத்திரமே ஜனாதிபதி அலுவலகத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களது கோப்புகளை 9 வருடம் கழித்தும் முறையாக தயாரிக்காமல் இருப்பது ஊழியர்களுக்கு செய்யும் அசாதாரணமான ஒரு செயல் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களின் கோப்புகளை தயாரிக்கும் பணிகள் தற்பொழுது இடம்பெற்றுவருவதாக பொது நிர்வாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
0 Comments