சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இக்கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனி பராக்கா ரோட்டில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கண்ணப்பன். இவரது மகன் தினேஷ் (25). அம்பத்தூரில் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.கடந்த சில நாட்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்த கண்ணப் பன், தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். மனைவி உடனிருந்து அவரை கவனித்து வருகிறார்.
இதனால் தினேஷ் மட்டும் அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் தனியாக வசித்து வந்தார்.நேற்று இரவு 10.30 மணி அளவில் தினேஷ் போர்வை மற்றும் மெத்தையால் சுற்றி கட்டப்பட்ட மூட்டை ஒன்றை லிப்ட் மூலமாக இறக்கி கீழே கொண்டு வந்தார். அதனை தனது காரில் ஏற்றுவதற்காக முயற்சி செய்தார். லிப்ட் மூலமாக மூட்டையை கீழ் தளத்துக்கு கொண்டு வந்து விட்ட அவரால், காரில் ஏற்ற முடியவில்லை.
இதனால் பக்கத்து வீட்டுக்காரரை துணைக்கு அழைத்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டிருக்கும் தனது தந்தைக்கு பெட்ஷீட் மற்றும் துணிகளுடன் மெத்தையும் தேவைப்படுவதாகவும் அதை மூட்டை கட்டி இருப்பதாகவும் அவரிடம் கூறினார்.
பக்கத்து வீட்டுக்காரர் மூட்டையை தூக்க உதவியபோது துணி மூட்டையில் இருந்து ஒரு கை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதை பார்த்து உதவிக்கு வந்தவர் பயத்தில் கூச்சல் போட்டார். இதனால் அக்கம் பக்கத் தில் இருந்தவர்கள் அங்கு திரண்டு விட்டனர். இதனால் பயந்து போன தினேஷ் நைசாக நழுவி தனது மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டார்.
குடியிருப்பு வாசிகள் தினேசின் காரில் இருந்த மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது இளம்பெண் ஒருவரின் உடல் துணி மூட்டையில் சுற்றி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதன் உள்பகுதியில் ரத்தமும் தேங்கி நின்றது.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடுக்கு மாடி குடியிருப்புவாசிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித் தனர். தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி விரைந்து சென்று காரில் இருந்த பெண்ணின் உடலை கீழ்ப்பாக் கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
கொலையாளி, தப்பிச் சென்று விட்டதால் கொலை யுண்ட பெண் யார்? என்பது தெரியாமல் போலீசார் குழம்பி தவித்தனர்.இதற்கிடையே இரவு 11 மணி அளவில், சூளை சட்டண்ண நாயக்கர் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு சென்று, தனது மகள் அருணாவை காணவில்லை என்று புகார் செய்தார்.
அப்போது அங்கிருந்த போலீசார், தலைமை செயலக காலனி போலீஸ் நிலைய எல்லையில் பெண் ஒருவர் கொலை செய்யப் பட்டிருக்கிறார். அவர் உங்கள் மகள்தானா, என்று போய் பாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனால் பதறியடித்துக் கொண்டு அருணாவின் பெற்றோரும், உறவினர்களும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந் தனர்.
அங்கு கொலை யுண்ட பெண்ணின் உடலை பார்த்து, இது தங்களது மகள்தான் என்று கூறி தலையில் அடித்துக் கொண்டு கதறினர்.
பி.காம் பட்டதாரியான அருணாவும், தினேசும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். அடிக்கடி தனிமையிலும் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
இந்நிலையில் தினேஷ், நேற்று மாலையில் அருணாவுக்கு போன் செய்து, தனது வீட்டில் யாரும் இல்லை. வீட்டுக்கு வா என்பது அழைத்துள்ளார்.
காதலனை நம்பி அருணா, வீட்டில் இருந்து தனது ஸ்கூட்டியில் புறப்பட்டு சென்றுள்ளார். தனது வீட்டுக்கு அருகில் காரில் காத்திருந்த தினேஷ், அருணாவின் ஸ்கூட்டியை அங்கேயே நிறுத்தச் சொல்லி விட்டு, காரில் அவரை வீட் டுக்கு அழைத்துச் சென்றுள் ளார்.சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் அடுக்கு மாடி குடியிருப்பில் தனியாக இருந்துள்ளனர்.
அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற் பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ், அருணாவை அடித்து உதைத் துள்ளார்.அப்போது வீட்டில் இருந்த கண்ணாடி பூந்தொட்டியை உடைத்து தினேஷ், அருணாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அருணா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் பயந்து போன தினேஷ், யாருக்கும் தெரியா மல் அருணாவின் உடலை மூட்டையாக கட்டி காரில் கடத்த திட்ட மிட்டார். உடலை சரியாக மூடி கட்டாமல் விட்டதால் வெளியில் தெரிந்த அருணாவின் கை, தினேசை காட்டிக் கொடுத்து விட்டது.
0 Comments